ゲーム攻略動画サイト

ゲームフォース

428~封鎖された渋谷で~の攻略動画

தினம் ஒரு பயப்படாதே/தினம் ஒரு புதுப்பாடல்/09.06.2024/நாள் 428

投稿日:

கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடமாட்டார், பயப்படாதே!
“கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” சங்கீதம் 94:14
“கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது” என்றும் சங்கீதம் சொல்கிறது. அதேபோல “அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது” என்றும் சங்கீதம் சொல்கிறது. அதாவது நாம் கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டு அவரது ஜனமாகிவிடுகிறோம். அதன்பிறகு அவர் நம்மை அவருக்கு சுதந்தரமாக தெரிந்துகொள்கிறார். இது சிந்தித்துப் பார்ப்பதற்கு நிச்சயாகவே வியப்பாக இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மெய்யான தேவனை தெய்வமாக ஏற்றுக்கொள்வது. அதன்பிறகு நாம் நமக்குரியவர்கள் அல்ல. அவரே நம்மை சுதந்தரமாக்கிக் கொள்கிறார். அதாவது நம்மை அவரது சொத்தாக்கிக் கொள்கிறார். நமது சொத்தை நாம் கைவிட்டுப் போக விட்டுவிடுவோமா? எவ்வளவு விலைக்கிரயம் செலுத்தியாகிலும் நமது சொத்தை நாம் மீட்டுக்கொள்வோம். மனிதர்களாகிய நாமே இந்த அழியப்போகிற சொத்துக்களுக்காக இவ்வளவு வைராக்கியம் பாராட்டினால் நம்மை உண்டாக்கிய தேவன் எவ்வளவு அதிகமாக வைராக்கியம் பாராட்டுவார். அதனால் அவர் நம்மை நெகிழவே விடமாட்டார்.
நெகிழவிடுவதும் ஏறக்குறைய கைவிடுவது போன்றதாகும். நமது குழந்தையை நாம் கையைப் பிடித்து ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம். இடையிலே கை வலிக்கிறது என்று நாம் கை நெகிழ விடுவோமா? அல்லது குழந்தைதான் அடம்பிடிக்கிறது என்று கை நெகிழ விட்டுவிடுவோமா? நிச்சயமாக விடமாட்டோம். ஏனென்றால் அது நமது குழந்தை. அதுதான் நமது சொத்து. அதுபோலவே நாம் ஒரு முறை அவரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டதும், அவர் நம்மைக் கரம்பற்றிக் கொள்கிறார். நம்முடைய எல்லாவிதமான சோதனைகளிலும் நம் கூடவே வருகிறார். பிசாசு நம்மை அவரிடமிருந்து பிரித்துவிட எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் அவர் நம்மை நெகிழவிடாமல் பார்த்துக்கொள்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மை மீட்டுக்கொள்ளும் பொருட்டு தம் ஜீவனையே கொடுத்திருக்கிறார். இதிலிருந்து நம்மீது அவர் எவ்வளவு அன்புள்ளவராக இருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது. அவரது இரத்தத்தை விலைக்கிரயமாக செலுத்தி அவர் நம்மை தமது உரிமைச் சொத்தாக்கியுள்ளார். அவர் நம்மை நெகிழவும் விடமாட்டார், கைவிடவும் மாட்டார்.
நீங்கள் வாழ்வில் நெகிழப்பட்டதுபோலவும் கைவிடப்பட்டது போலவும் உணர்கிறீர்களா? பயப்படாதிருங்கள். அவர் உங்களை இறுகப்பற்றும் நாளும் அதை உணர்ந்துகொள்வீர்கள். அவர் நம்மை ஒருபோதும் கை நெகிழவே விடமாட்டார் என்று உறுதியாக விசுவாசியுங்கள். வாழ்வில் உன்னத அனுபவத்தைப் பெறுவீர்கள். ஆமென்!

-428~封鎖された渋谷で~の攻略動画
-

Copyright© ゲームフォース , 2024 AllRights Reserved.